Wednesday 20 June 2018

வீரப்பேரரசர் முத்துவடுகநாதத் தேவர் 246 வது நினைவு நாள் சுவரொட்டிகள்


சிவகங்கை சீமையின் இரண்டாவது மன்னர் சசிவர்ண முத்துவடுகநாதப் பெரிய உடையாத் தேவர் மற்றும் இளைய ராணி கெளரி நாச்சியார் ஆகியோரின் 246 வது நினைவு நாள் மற்றும் வீரவணக்க நாள் விழா ஜூன் - 25 - 2018 அன்று காளையார்கோவில் மன்னர் மாலையீட்டில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

மாமன்னர் சசிவர்ண முத்துவடுகநாதத் தேவரின் வீரத்தையும்; போர் திறனையும் புதிய தலைமுறையினர்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மறத்தமிழர் சேனை இயக்கம் களப்பணி ஆற்றி வருகிறது. குறிப்பாக, ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி, பொன்.பாண்டித்துரை தேவர், வேலு நாச்சியார், கீழத்தூவல் தியாகிகள் ஐவர், மன்னர் பாஸ்கர சேதுபதி, மாமன்னர் பூலித்தேவர் போன்ற மாபெரும் சமூக ஆளுமைகள் குறித்த விவாதங்களை கிளப்பி வெகுஜன கவனிப்பை ஏற்படுத்தியிருக்கிறோம்.

அதே சம முக்கியத்துவத்தோடு கடந்த சில வருடங்களாக திட்டமிட்டு உழைத்து வருகிறோம். சிவகங்கை சீமை அரசாண்ட மாமன்னர் சசிவர்ண முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர் அவர்கள் குறித்த விவாதத்தை கிளப்பும் நோக்கில் சுவர் விளம்பரங்கள் மறத்தமிழர் சேனை மதுரை மாவட்ட நிர்வாகிகளின் சிறந்த செயல்பாட்டால் நடைபெற்றது. தற்பொழுது 246 வது நினைவு நாளை முன்னிட்டு தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளால் சுவரொட்டிகள் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டு உள்ளன. அவற்றில் வெகுமக்கள் கவனம் ஈர்த்த சிலவற்றை காணலாம்.

Monday 18 July 2011

அகமுடையார்.

அகமுடையார்.

Agamudayar

Agamudayar(Tamil: அகமுடையார்) meaning Landlords are also known as Thuluva Vellalars are one of the three castes that make up the Mukkulathor confederacy. Agamudayars are famously known by their title Servai - "A fearless community show many signs of independence and non-submission to any form of subjugation". They make expert soldiers, warriors and constituted the bulk of Chola and Pandya armies. The legendary Marudu brothers' came from the Agamudayar (Servai) community. The Agamudaiyars also known as Thuluva Vellalars are the original landlords of the Southern Tamilnadu and are related to the Vellalars of Tamilnadu, who migrated out of the Chola country to other parts of the South India. The lands the community owns are actually rewarded for their loyal and valuable service rendered for the cause of the Kings and the nation.

அகமுடையார்களாக ஒன்றிணைவோம்...!

அகமுடையார்களாக ஒன்றிணைவோம்...!

அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார் யென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் அரசியல் சார்பற்ற சமுதாய களம்.தனி நபர் அடையாளமோ, தனிநபர் விளம்பரமோ இல்லாத ஒருங்கிணைந்த சமுதாய பேரமைப்பு.இதுவொரு பல உறவுகளின் கூட்டு முயற்சியில் உதயமான அரசியல் லாப நோக்கமற்ற அமைப்பு.அகமுடையார் சமுதாயத்தை வலுசேர்க்க, நீங்களும் எங்களோடு கரம் சேர்த்து சமுதாய பணியாற்றிட அடங்கா உணர்வோடு "அகமுடையார் அரசுஅமைப்பு" அழைப்பு விடுக்கிறது.